இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும் வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் ஒரு நொடிப்பொழுதில் காணாமல் போகுமாம்

பொதுவாகவே மந்திரம் என்றால் அந்த வார்த்தைகளை உச்சரிப்பதில் ஒரு சில கஷ்டம் இருக்கும். எந்தவித கஷ்டமான வார்த்தையும் இல்லாமல் நம்முடைய கஷ்டங்களை எல்லாம் போக்கக்கூடிய சுலபமான ஒரே ஒரு வரி மந்திரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு மட்டும் நன்மை கிடைப்பதோடு இல்லாமல், அந்த இடத்தைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும். இத்தனை சிறப்புகளை கொண்ட அந்த ஒரு வரி மந்திரம் என்ன.

நற்பவி! நற்பவி! நற்பவி! ‘நற் – நல்லது’ ‘பவி – பவிகட்டும் அல்லது உண்டாகட்டும்’ என்ற அர்த்தத்தை குறிக்கின்றது. காகபுஜண்டர் சித்தர் அருளிய இந்த ஒரு வரி மந்திரத்தை ‘ஓம் நற்பவி’ என்று உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்க நேரம் காலம் எதுவும் கிடையாது. பூஜை அறைக்கு செல்ல வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் கூட கிடையாது.

 

உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி இருந்த இடத்திலிருந்தே மௌனமாக மனதிற்குள் இந்த மந்திரத்தை உச்சரிப்பது நன்மைதரும். அப்படி இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் அமர்ந்து வாய்விட்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது இதனுடைய சத்தம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மையைத் தேடித் தரும். குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த ஒரு வார்த்தையில் இந்த உலக மக்கள் அனைவரின் நன்மையும் அடக்கும் என்பதுதான் உண்மை.

நேரம் கிடைக்கும்போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் ‘ஓம் நற்பவி’ ‘ஓம் நற்பவி’ என்று எழுதுவதும் நமக்கு நேர்மறை ஆற்றலையும் நன்மையையும் கொடுக்கும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம், இனம்புரியாத துன்பங்கள் துயரங்கள் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து, எழுதி பலன் பெறலாம்.

 

ஓம் நற்பவி என்ற மந்திரத்தை ஆழ்மனதில் பதிய வைத்து முழு மனதோடு உச்சரித்தால் காகபுஜண்டர் சித்தர் நம் மனதிற்குள் புகுந்து நல்ல எண்ணத்தை, நல்ல சிந்தனையை, நேர்மறை ஆற்றலை, தைரியத்தை நமக்குள் புகுத்தி விடுவார் என்பது நம்பிக்கை. இரவில் நல்ல தூக்கம் வரவில்லை என்றாலும் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.

எதிர்பாராமல் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி கொண்டீர்கள். அதிலிருந்து விடுபட வேண்டும் என்றாலும், அந்த இடத்தில் இருந்து கொண்டே நற்பவி நற்பவி நற்பவி என்ற மந்திரத்தை மனதார உச்சரியுங்கள். நிச்சயமாக அந்த சிக்கலுக்கான விடிவு காலத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக்கொடுக்கும். ஒரு இன்டர்வியூக்கு போறீங்க, அல்லது நல்ல வரன் பார்க்க செல்கிறீர்கள், அல்லது உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது அல்லது உங்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது இப்படி எல்லா சுப நிகழ்ச்சிகளும் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால் அந்த இடத்தில் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு இனம்புரியாத பயம் தடுமாற்றம் வரும் அல்லவா. அதை நீக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த நற்பவி மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். உங்களுக்குள் வரும் வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.