உங்கள் வீட்டு பீரோ இந்த திசையில் இருந்தால் பணவரவும் இருக்காதாம், வீண் விரையமும் அதிகமாகுமாம்..உஷாரா இருங்க

ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை தோன்றி விட்டால், மன கவலையாக இருந்தால் உடனே கோவிலுக்கு சென்று வருவதுதான் அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும். இப்படி அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதே போல வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாஸ்துப்படி செய்யும் அனைத்திற்க்கும் நல்ல பலன் இருக்கிறது. இவற்றிற்கு எதிர்மறையாக செய்துவிட்டால் அதற்கான கெடுபலனையும் நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே ஒருவர் புதிய மனை வாங்கி வீடு கட்டும் போது அந்த வீட்டின் வாசல், சமையலறை, படுக்கையறை குளியலறை ஆகிய அனைத்தும் எந்த திசையில் அமைய வேண்டும் என்பதை வாஸ்து படி அமைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அந்த குடும்பத்தில் நடக்கும் அனைத்தும் நன்மையாக இருக்கும். அது போல வீட்டில் வைக்கப்படும் பீரோ முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை சரியான திசையில் வைத்தால் நாம் சம்பாதிக்கும் பணம் இரட்டிப்பாக அதிகரிக்கும். வாருங்கள் பீரோவை வீட்டில் எந்த திசையில், எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தென்மேற்கு திசையை பார்த்தவாறு பீரோ அல்லது பணம் வைக்கும் பெட்டியில் வைத்திருந்தால் நாம் வைக்கும் பணம் இரட்டிப்பாக அதிகரிக்கிறது பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும் முன்புறம் வடக்கு திசை நோக்கியும் அமைய வேண்டும்.

ஒருவருடைய வருமானம் அதிகரிக்க வேண்டும், தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குபேரருக்கு உரிய திசையான மேற்கு திசை நோக்கி தங்களின் பீரோவை வைத்து விட வேண்டும். பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாலும், அங்கு வைக்கும் போது பீரோவிற்க்கும், சுவருக்கும் இடையே இடைவெளி இருக்குமாறு வைக்க வேண்டும்.

அப்போதுதான் வாயு பகவான் பீரோவை சுற்றி ஊடுருவி செல்ல முடியும். இவ்வாறு வாயு பகவான் செல்வதற்கு இடம் இல்லாமல் இருந்தால் பண நெருக்கடி ஏற்படும். பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாமல் போகும். இப்படி பணத்தை வைக்கும் பிரோ, மாணவர்கள், பணபட்டி எதனையும் உதாசீனப் படுத்த கூடாது.

இவற்றை உதாசீனப் படுத்தினால் மகாலட்சுமி நம்மிடம் தங்காமல் வெளியேறி விடுவாள். வடமேற்கில் பீரோ வைத்திருந்தால் செலவுகளும் அதிகரிக்கும், கடன் வாங்கும் சூழ்நிலையும் வரும். அவ்வாறு தென்கிழக்கில் பீரோ இருந்தால் வீண் விரயங்களும், செலவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

பீரோவைத் தெற்கு மூலையில் வைக்க இடம் இல்லாதவர்கள் பீரோவின் பின்புறம் மேற்கு திசை நோக்கியும், முன்புறம் கிழக்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வீண் விரையம் குறையும். இவ்வாறு இந்த முறைகளில் எவற்றை நம்மால் செய்ய முடியுமோ அதனை சரியாக செய்து வந்தால், நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை தக்க வழியில் பாதுகாத்துக் கொள்ளலாம்.