யாழ். பருத்தித்துறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சூசைப்பிள்ளை சகாயராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த வேளை குளவிக்கொட்டுக்கு இலக்காகி அவர் மயக்கமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.