சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில், மாவட்ட மட்டத்தில் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்களை மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.