சிறுமியை கடத்த முற்பட்ட மர்ம நபர் – யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 4 வயது சிறுமியை முகமூடி அணிந்த நபர் கடத்த முயன்ற சம்பவம் பரபர‌ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில், பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலு‌ம் தெரிய வருகையில்,

நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டின் முன்பக்கம் பேத்தியாருடன்  சிறுமியும் சிறுமியின் சகோதரனும் அருகே உறங்கியுள்ளனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் சிறுமியை யாரோ ஒருவர் தூக்கி வைத்து இருப்பதை பேத்தியார் அவதானித்துள்ளார் .

அந்த நபர் முகமூடி அணிந்து இருப்பதை கண்டு அச்சத்தில் அவர் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார்.

இதனை அடுத்து சிறுமியை விட்டுவிட்டு முகமூடி அணிந்த நபர் தலைமறைவாகி உள்ளார்.