லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் நாளை(8) விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இன்று எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது.

பல நாட்களாக சந்தையில் எரிவாயு இன்மையால் பொதுமக்கள் வரிசையில் நின்று எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள முண்டியடிக்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ   நிறுவனம் தெரிவித்துள்ளது.