பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையத்தின் தலைவராக பணியாற்றிய இவர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில், நிலவிய பதவி வெற்றிடத்திற்கு உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டதுடன், அவர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.