எப்பாவல பிரதேசத்தில் இரட்டைக் கொலை – பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்

எப்பாவல பிரதேசத்தில் நேற்று இரவு இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்பாவல – எந்கல சந்தியில் உள்ள வீடொன்றில், வீட்டின் உரிமையாளரும் அவரது நண்பரும் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த சிலர் கூரிய ஆயுதங்களால் அவர்களை தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலியானவர்கள் 46 மற்றும் 31 வயதுகளையுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மதுப் பாவனை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய சில பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.