விவசாயிகளின் நலன் கருதி கடன்கள் தள்ளுபடி – ரணில் அறிவிப்பு

சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய அரச சேவைகளை தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர், 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்வைத்திருந்தார்.

இதன்போது விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதன்படி, இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.