உங்கள் ராசிக்கு பொருத்தமான ஆத்ம துணை யார்?

ஒருவரின் வாழ்க்கை, எதிர்காலம் மட்டுமில்லாமல், ஒருவரின் குண நலன்கள், அவரின் குணநலன்களுக்கு ஏற்ற பொருத்தமான துணை யார் இருப்பார் போன்ற பல்வேறு விஷயங்களை விளக்க வல்லது ஜோதிடம்.

ஒருவரின் திருமண வாழ்க்கையில் பலரும் அவர்களின் வெளித்தோற்றம் பார்த்து, சரியான ஜோடி, பொருத்தமான ஜோடி என கூறுவதுண்டு.

மனப் பொருத்தம், ஆத்ம துணையாக இருப்பாரா என்ற சந்தேகம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரின் குணநலன்களுக்கு ஏற்ற பொருத்தமான துணை யார்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

​மேஷம்

மேஷம் ராசியினர் எதிலும் ஆர்வமுள்ள, ஆளுமை, வீரம், வேகம், தன்னம்பிக்கையுடன் பழகக்கூடியவர்கள். இவர்களிடம் பொறுமை குறைவாகவும், கோபம் சற்று அதிகமாகவும் இருக்கும். வேகமாக எல்லாம் நடக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை, உறுதியான மற்றும் தைரியமான பிரச்சினைகளைக் கண்டு பயப்படாத ஒருவர் ஆத்ம துணையாக அமைவார்.

மேஷ ராசிக்கு சாத்தியமான ஆத்ம துணை : மேஷம், சிம்மம், தனுசு, ஜெமினி மற்றும் கும்பம்.

​ரிஷபம்

சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியினர் விசுவாசமானவர்கள். அதே போல தன் துணை, தன் நண்பர்களிடமும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள், அதையே எதிர்பார்ப்பார்கள். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இவர்கள், நேர்மறையாக முன்னோக்கிச் செல்ல நினைப்பார்கள். வெளிப்படையான இவர்கள் காதல், அன்பு தேடக்கூடியவர்கள்.

தன் துணை அல்லது நண்பர்கள் தன்னை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், உலகில் தாங்கள் மட்டுமே இருப்பது போல உணரக்கூடியவர்கள்.

ரிஷப ராசிக்கான ஆத்ம துணை : கடகம், மகரம், கன்னி மற்றும் மீனம்.

​மிதுனம்

மிதுன ராசியினர் புதிய நட்பும், பழகுவதிலும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் புத்திசாலி, வேடிக்கையான சுவாரஸ்யமான நபர்கள். புதிய விஷயங்களை எப்போதும் யோசிக்கும், செய்யக்கூடிய இவர்களுடன் கருத்து வேறுபாடு வருகிறதென்றால் அதற்கு காரணம் நீங்கள் பழைய விஷயங்களைப் பின்பற்றுகிறீர்கள் அல்லது சலிப்பான வேலையையே செய்கிறீர்கள் எனலாம்.

புத்திக்கூர்மை, நகைச்சுவை உணர்வு சுவாரஸ்யமாக இருக்க நினைக்கும் மிதுன ராசினரின் ஆத்ம நண்பர்களும் அது போலவே புதிய விஷயங்களில் நாட்டமுடையவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

மிதுன ராசிக்கான ஆத்ம துணை : சிம்மம், துலாம், மேஷம் மற்றும் கும்பம் ராசி

​கடகம்

கடக ராசியினர் மிகவும் பாசமுள்ள, இரக்கக் குணம் கொண்ட சிற்றின்ப எண்ணம் கொண்டவர்கள். கடக ராசியினரின் அன்பும், நட்பும் கிடைப்பது ஒருவகை பாக்கியம். பிறரின் மனதை கவரும் அளவுக்கு புத்திசாலித்தனமான, அன்பானவர்களாக இருக்கும் இவர்களுக்கு, தன் மீது அதிக அக்கறையும், தன் வலியை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் தன் சோல் மேட்டாக வேண்டும் என நினைப்பார்கள்.

கடக ராசி ஆத்ம துணை : விருச்சிகம், ரிஷபம், மீனம் மற்றும் கன்னி.

​சிம்மம்

சிம்ம ராசியினர் ஆளுமை நிறைந்தவர்கள். சாகசத்திற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். இவர்கள் எதைக் கண்டும் அஞ்சாமல், அடுத்து என்ன என தெரிந்து கொள்ள நேரமில்லாமல் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பார்கள்.

இவர்களுக்கு நம்பிக்கையான, சில மர்ம குணம் கொண்ட மற்றும் பிரச்சினைக்கு வெளியில் இருந்து சிந்தித்து பிரச்சினையைத் தீர்க்கக்கூடியவர்கள் இவர்களுக்கு சிறந்த சோல் மேட் எனும் ஆத்ம துணையாக இருப்பார்கள்.

சிம்ம ராசிக்கு ஏற்ற ஆத்ம துணை : மிதுனம், துலாம், தனுசு மற்றும் மேஷம்.

​கன்னி

கன்னி ராசியினர் சிக்கலான, இலட்சியம் கொண்ட, புதிய விஷயங்களை தேடக்கூடிய இவர்களுக்கு எப்போதும், புதிய விஷயங்கள், இலட்சியம் குறித்து ஒரு உந்துதல் கொண்டவர்கள் ஆத்ம நண்பராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இலட்சியம் இன்றி, வேலையின்றி நாள் முழுவதும் எதையும் சாதிக்காமல் சுற்றித் திரிபவராக இருக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, கன்னி ராசிக்கு அவர்களைப் போலவே உறவில் உறுதியாக இருக்கும் ஒருவர் தேவை!

கன்னி ராசிக்கு ஏற்ற ஆத்ம துணை: விருச்சிகம், மகரம், கடகம் மற்றும் ரிஷபம்.

​துலாம்

துலாம் ராசியினர் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். சீரற்ற நண்பர்களுடன் சேர மாட்டார்கள். தோற்றம், புத்திசாலித்தனம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை அழகாக இருக்க அழகும் தேவை என உடல் அழகை விரும்புபவர்களாக அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களாக இருக்கும் நபர்களுடன் பழக நினைப்பார்கள். தனக்கு என்ன வேண்டும் என அறிந்த ஒரு நபர் ஆத்ம நண்பராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

துலாம் ராசியினர் தேர்வு செய்யும் ஆத்ம துணை: மிதுனம், கும்பம், தனுசு மற்றும் சிம்மம்.

​விருச்சிகம்

விருச்சிக ராசியினரின் அன்பு ஆழமானது, தீவிரமானது, ஒப்பற்ற நிபந்தனையற்ற அன்பு செலுத்தக்கூடியவர்கள். இவர்களுக்கு ஆர்வமும், தன்னம்பிக்கையும் அளிக்கக்கூடியவர்கள் தான் முக்கியமாக தேவைப்படுவார்கள். கற்பனைத் திறன் அதிகம் கொண்ட ஆழமாகச் சிந்திக்கக்கூடிய இவர்கள், வெளிப்படையாக தன் செயல்பாடுகளைச் சொல்லமாட்டார்கள். எப்போது சில மர்மம் மற்றும் சூழ்ச்சியையே விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் தனக்கே சவால் விடக்கூடியவர்களையும், நம்பிக்கை தரக்கூடியவர்களை விரும்புவார்கள்.

இவர்கள் புத்திசாலியான, நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள் தன் ஆத்ம நண்பர்களாக அமைய வேண்டும் என நினைப்பார்கள்.

விருச்சிக ராசியினரின் ஆத்ம துணை: மீனம், கன்னி, மகரம் மற்றும் கடகம்.

​தனுசு

சாகச விரும்பிகளான தனுசு ராசியினர் திறந்த மனதுடன், சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள். மற்றவர்களை தங்கள் நலனுக்காக மாற்ற விரும்புபவர்கள் அல்ல. சுதந்திரமாக இருக்க நினைக்கும் இவர்கள், மற்றவர்களை அதிகம் தன் உடைமையாக்கவோ அல்லது பற்றிக் கொண்டு இருக்கவோ விரும்புவதில்லை.

தனுசு ராசிக்கு பாராட்டும், ஆர்வத்தையும், நம்பிக்கையும் தரக்கூடியவர்களை விரும்புவார்கள். இவர்கள் எந்த ஒரு உறவையும் சரிசெய்யவோ, புதுப்பிக்கவோ விரும்புவதில்லை. அதே சமயம் இவர்கள் அந்தளவுக்கு கெட்டவர்களும் அல்ல.

தனுசு ஆத்ம தோழர்கள்: சிம்மம், கும்பம், மேஷம் மற்றும் துலாம்.

​மகரம்

கடின உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் பெயர்பெற்றவர்கள் மகரம். இவர்கள் காதல் சொல்லவோ, காதலிக்கவோ பயப்படுவதில்லை. தன் மனதிற்கு பிடித்த நபரைப் பார்த்ததும் காதலிக்கத் தொடங்குவார்கள். இவர்களுக்கு திறமையான, புத்திசாலித்தனமான, அர்த்தமான வழிகாட்டுதல், நம்பகத்தன்மை கொண்டவர்களை ஆத்ம நண்பர்களாக, துணையாக்க நினைப்பார்கள்.

மகர ராசிக்கான சாத்தியமான ஆத்ம துணை: மீனம், ரிஷபம், கன்னி மற்றும் விருச்சிகம்.

கும்பம்

நகைச்சுவை உணர்வு, வேடிக்கையான குணம், ஆளுமைக் கொண்டவராக இருப்பவர் கும்ப ராசியினர். இவர்களுடன் சாகசத்திற்குத் தயாராக இருக்கக்கூடிய, நகைச்சுவை உணர்வு, கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவர்களிடம் பெருமளவில் ஈர்க்கப்படுகிறார்கள். நீங்கள் அவர்களை சிரிக்க வைக்க முடிந்தால், அவர்களை எதையும் செய்ய வைக்கலாம். சமைப்பதும் ஒரு பெரிய பிளஸ், ஏனென்றால் கும்ப ராசிக்காரர்கள் சாப்பிட விரும்புவார்கள்!

சாத்தியமான ஆத்ம துணை : துலாம், மேஷம், மிதுனம் மற்றும் தனுசு.

​மீனம்

மீன ராசியினர் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள். அதிகம் அன்பை செலுத்தக்கூடிய இவர்கள், பொய், துரோகத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஆக்கப்பூர்வமான, தன்னம்பிக்கை தரும், பிறர் முன் விட்டுக் கொடுக்காத நபரை தன் ஆத்ம துணையாக வர வேண்டும் என நினைப்பார்கள்.

மீன ராசிக்கான சாத்தியமான ஆத்ம துணைகள் : கடகம், விருச்சிகம், மகரம் மற்றும் ரிஷபம்.