கனடாவில் தமிழர் ஒருவர் அநாகரீக செயல் புரிந்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது

கனடாவில் தமிழர் ஒருவர் அநாகரீக செயல் புரிந்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

59 வயதான, அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த, கண்ணா பொன்னையா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாதாக Durham பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அநாகரீகமான சட்டம் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24,25,26ஆம் திகதிகளில் பேருந்துக்காக காத்திருந்த இரு பெண்களிடம் குறித்த நபர் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.