தற்போது வெளியான விசேட செய்தி..! இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா.!!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக காணப்படுகின்ற நிலையில், 467 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.