அதிகரித்தது சிமெந்தின் விலை!!

50 கிலோ கிராம் சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சிமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சிமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 3000 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி 50 கிலோ கிராம் சிமெந்து மூட்டையின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.