தென்பகுதியில் தொடரும் துப்பாக்கிச் சூடு!! பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பில் இன்று (6) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பு – முகத்துவாரம் (மோதர), ரெட்பானா வத்த பகுதியில் இச்சம்பவம் பிற்பகல் வேளை இடம்பெற்றுள்ளது.

23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ள நிலையில், அவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 5 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.