நித்திரைக்குச் சென்ற மாணவியை காணவில்லை..!! பொலிஸார் தீவிர விசாரணை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு கிராமத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூங்கிலாறு வடக்கில் வசித்து வந்த 12 அகவையுடைய மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நித்திரை கொள்ளச் சென்ற குறித்த மாணவியை அதிகாலையில் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அப்பா என்னை மன்னித்து விடுங்கள், என்னைத் தேடவேண்டாம்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் தொடர்பு ஒருதடவை கிடைத்துள்ளதாகவும் மேற்கொண்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றும், பின்னணியில் காதல் விவகாரம் உள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.