கச்சதீவு மீட்பு விவகாரம் – இந்திய துணைத்தூதுவர் கூறிய பதில்

கச்சதீவை மீட்பதென்பது உத்தியோகபூர்மாக வரும் விடயம் அல்ல. அவை எல்லாம் ஊடகங்களில் வரும் விடயங்களாகவே இருக்கின்றன என இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற இந்திய மக்களின் நிவாரணப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து முதலீடு மற்றும் தொழில்வாய்ப்பு சந்தர்ப்பங்களை கொண்டு வரவும் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். மிக விரைவில் இதற்கான பலனை வட மாகாணத்தில் காண்போம் எனக்கூறினார்.

இதன்போது இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஒன்றரை மாதங்களாக இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கப்பல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தையும் பல மட்டங்களில் இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.