தயிர் சாதத்தை உண்பதால் இவ்வளவு நன்மைகளா…!!

தயிர் சாதம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. தயிர் சாதத்தில் புரோட்டீன், அன்டி-ஒக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. இந்த சத்துக்கள் அனைத்துமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதவை.

குறிப்பாக தயிர் சாதத்தை பல திரைப்பட பிரபலங்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்கும் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்த தயிர் சாதத்தை தினமும் உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

தயிர் சாதத்தை உப்பு சேர்க்காமல் சாப்பிடலாம். ஆகவே இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இந்தச் சாதம் மிகவும் நல்லது. தயிர் சாதத்தை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மனதை அமைதிப்படுத்தும்

தயிர் சாதம் என்பது நன்கு ஓய்வெடுக்க உதவும் ஓர் அற்புத உணவு. இதில் புரோபயோடிக்குகள், அன்டி-ஒக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகளவில் உள்ளன. இவை அனைத்தும் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவுகின்றன.

செரிமானத்திற்கு நல்லது

தயிர் ஒரு புரோபயோடிக் பால் பொருள். இது செரிமான மண்டலத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஏற்கனவே சாதத்தில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது. தயிர் சாதத்தை உட்கொள்வதால் வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவி புரியும்.

ஆற்றலை வழங்கும்

ஒரு கப் தயிர் சாதமானது ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றலை வழங்கக்கூடும். தயிரில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது செரிமான நொதிகளால் உடைக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

சருமத்திற்கு நல்லது

தயிர் சாதத்தில் சருமத்திற்கு நன்மைகளை அளிக்கும் பண்புகள் உள்ளன. தயிர் சாதம் செரிமானத்தை எளிதாக்குவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குவதால், இது சருமத்தில் நேரடியாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் தயிர் சாதம் சாப்பிடுவோரின் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கிறது.