சிறுவர் வைத்தியசாலையில் பதிவான நெகிழ்ச்சி சம்பவம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.

அண்மையில் குறித்த வைத்தியசாலையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு தேவையான அளவை விட, அதிகமான உணவுப் பொருட்களை இலங்கை மக்கள் வழங்கி தம்மை நெகிழ வைத்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் உணவுப் பொருட்கள் தேவைக்கு அதிகமாக கிடைத்தால் அவை வீணாகிவிடலாம் எனவும், முடிந்தால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை வழங்குமாறும் பணிப்பாளர் நன்கொடையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பட்டியல் மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.