இந்த ஒரு மந்திரம் போதும்!! உங்கள் வீட்டில் பணம் நிரந்தரமாக தங்க…

மகாலட்சுமியை வசியம் செய்யக்கூடிய ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அந்த பொருளாகவே விரும்பி நம் கைக்கு வந்தால் தான், அது நிலையாக நிற்கும். அதுபோல தான் பணமும் நம் கைக்கு வரும்போது விருப்பத்தோடு வரவேண்டும்.

வேண்டா வெறுப்போடு வரக்கூடிய பணம் நம் கையில் நிலைத்து நிற்காமல் மீண்டும் வீண்செலவாகி விடுகின்றது. பணத்திற்கு நம்மை பிடிக்க வேண்டுமென்றால், அந்த மகாலட்சுமிக்கும் நம்மை மிகவும் பிடிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

லட்சுமி கடாட்சத்தை பெறுவது எப்படி

அதிகாலை வேளையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து ஒரே ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கீழே விரிப்பு விரித்து நீங்களும் அமர்ந்து கொள்ள வேண்டும். பின் சொல்லக்கூடிய மந்திரத்தை ஒரே ஒருமுறை உச்சரித்தால் போதும். உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது.

உங்களால் வாசம் மிகுந்த ஊதுவத்தி ஏற்றி வைக்க முடியும். வாசம் நிறைந்த பூக்களால் மகாலட்சுமிக்கு ஒவ்வொரு வரி மந்திரம் சொல்லும் போதும் அர்ச்சனை செய்ய முடியும் என்றால், அதை எல்லாம் தாராளமாக செய்யலாம்.

காலை 5.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் உங்கள் வீட்டு பூஜையறையில் இந்த மந்திரத்தை வாய்விட்டு ராகத்தோடு உச்சரிப்பது நல்லது.

இந்த மந்திரத்தின் சக்தி என்ன

உங்களுடைய வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களையும் அதிகாலை வேளையிலேயே எழவைத்து அவர்களுடைய வாயாலும் இந்த மந்திரத்தைச் சொல்ல வைக்கலாம். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்த மந்திரத்தை மனம் உருகிச் சொல்லும் போது அதற்கு ஒரு தனிச் சக்தி உண்டு.

கடன் சுமை, வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், வேலை இல்லாமல் தவித்து வருபவர்கள். இப்படி எல்லோருக்கும் கை மேல் பலன் தரக்கூடியதாக அதிகளவானோரால் நம்பப்படும் அதி சக்தி வாய்ந்த மந்திரம் இதோ உங்களுக்காக.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்ரீ வேத ரூபியே நமோஸ்துதே
ஸ்ரீ நாத ரூபே நமோஸ்துதே
ஸ்ரீ அஷ்டலட்சுமி நமோஸ்துதே
ஸ்ரீ ஆதார நிலயே நமோஸ்துதே

ஸ்ரீ ஸெந்தர்ய ரூபே நமோஸ்துதே
ஸ்ரீ நாராயண ப்ரியதமே நமோஸ்துதே
ஸ்ரீ விஷ்ணு மாயே நமோஸ்துதே
ஸ்ரீ காருண்ய பூர்ணே நமோஸ்துதே
ஸ்ரீ பீதாம்பர தேவியே நமோஸ்துதே

ஸ்ரீ மங்கள ரூபே நமோஸ்துதே
ஸ்ரீ குபேர லட்சுமி நமோஸ்துதே
ஸ்ரீ ஈசான லட்சுமி நமோஸ்துதே
ஸ்ரீ காயத்ரி தேவி நமோஸ்துதே
ஸ்ரீ தனதா தேவியை நமோஸ்துதே
ஓம் ஐம் க்லீம் தனம் தருவாய் நமோஸ்துதே

இத்தனை நாட்கள் தான் மந்திரத்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மந்திரத்தை உச்சரித்த ஒரு சில நாட்களிலேயே உங்களால் இந்த மந்திரத்தை அடுத்த நாள் சொல்லாமல் இருக்க முடியாது.

மகாலட்சுமியே விரும்பி எம் வீட்டிற்குள் நுழைந்தால் யாராவது வேண்டாம் என்றா சொல்வார்கள்!!!