இப்படிப்பட்ட செயல்களை ஆண்கள் செய்தால் தீராத பாவம் வந்து சேருமாம்..!!

இருட்டிய பின் உப்பு கடன் கேட்கக்கூடாது. செவ்வாய்க்கிழமை பணம் தந்தால் லட்சுமி கடாட்சம் குறைந்து போய்விடும் என்பது போன்று ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே நிலவி வருகின்றன. அதில் ஆண்கள் செய்யக்கூடாத சில செயல்களும் உண்டு. அதையும் மீறி செய்தால் தீராத தோஷம் வரும் என்று முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.


ஆண்கள் அப்படி என்னென்ன செயல்களை செய்யவே கூடாது என தெரியுமா?மனைவி கர்ப்பமாக இருக்கும்போது முடி வெட்டுதல், பிரேதத்தின் பின்னால் செல்லுதல், கடலில் குளித்தல், வெளிநாடுகளுக்கு செல்லுதல், வீடு கட்டுதல், கெட்ட காரியங்கள் நடந்த வீட்டில் சாப்பிடுதல், வீட்டில் வேறு ஏதேனும் திருமணம் செய்தல், வீடு கட்டுதல் போன்ற செயல்களைச் செய்யவே கூடாது.

மாடு, கன்றுக்குட்டி கட்டியிருக்கும்போது அது கட்டப்பட்டிருக்கும் கயிறை தாண்டக்கூடாது.தண்ணீரில் தன்னுடைய உருவத்தைப் பார்க்கக்கூடாது.வாசல் நிலையில் உட்காரக் கூடாது.மழை பெய்யும்போது மெதுவாக சென்று ஒதுங்கலாம். ஆனால் ஆண்கள் மழையில் வேகமாக ஓடக்கூடாதாம்.தரையில் கை ஊன்றி சாப்பிடக்கூடாது.உடம்பில் துணி ஏதுமில்லாமல் குளிக்கக் கூடாது. அதேபோல் உடலில் துணியேதுமின்றி மல ஜலம் கழிக்கக்கூடாது.பாம்பு புற்றின் அருகிலும் எறும்பு புற்றுக்கு அருகிலும் சிறுநீர் கழிக்கக்கூடாது.