நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் அவரைக்காய் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அவரைக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அவரைக்காய் மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பிஞ்சு அவரை மிகவும் உடல் நலத்திற்கு உகந்தது.

அவரையில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் வளமான அளவில் இருப்பதால், இவை நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேப்படுத்துகிறது. எனவே அவரைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது.

அவரைக்காயில் கால்சியம் சத்து கணிசமான அளவில் உள்ளது. இது நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

அவரைக்காயில் நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், இவை நம் உடலில் உள்ள நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.