யாழ். பல்கலைக்கழகத்தினுள் நேற்று இடம்பெற்ற அசம்பாவிதம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் நேற்று திடீரென நுழைந்து தாக்குதல் நடத்திய இருவர் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நேற்று(5) பல்கலைக்கழக வளாகத்தில் தியாகி பொன். சிவகுமாரனின் 48ஆவது நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது.

குறித்த நினைவேந்தல் நிகழ்விற்காக, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி நினைவேந்தலை மேற்கொண்டனர்.

நிகழ்வு முடிவுற்ற பின்னர் அங்கு நின்ற மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர்.

பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

இதன்போது அங்கிருந்த ஏனைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து குறித்த இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.