பிரபல சிங்கள திரைப்பட நடிகை மரணம்

பிரபல சிங்கள திரைப்பட நடிகை சுமனா அமரசிங்க உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். சுமனா அமரசிங்க உயிரிழக்கும் போது அவருக்கு வயது 73.

பிப்பென குமுது என்ற சிங்கள திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான அவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரேன கிரவ், மே தேச குமட்டத, சுது பரவியோ, கெடுனு பொறந்துவ போன்ற பிரபல படங்களிலும் அவர் நடித்துள்ளதுடன் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.