கொரோனா என்ற பெயர் பெற்ற பெண் குழந்தை..ஆண் குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர்..!!

உத்திரப்பிரதேசத்தில் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா என்று பெயரிடப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் தற்போது புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், தேசிய ஊரடங்கு உத்தரவு இரண்டும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். மறக்க முடியாத இந்த நிகழ்வையே பிறந்த குழந்தைகளுக்கு பெயராக வைக்கும் சுவாரஸ்யமும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசத்தில் தியோரியா மாவட்டத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று அவர்களது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.என்னுடைய குழந்தை ஊரடங்கு சமயத்தில் பிறந்தான். கொரோனா தொற்று மக்களிடம் பரவாமல் தடுக்க சரியான சமயத்தில் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு தேசிய நலன் மீதான அக்கறை. அதனால், எங்களின் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ பெயர் வைக்க முடிவு செய்தோம்’ என்று குழந்தையின் தந்தை பவன் கூறினார்.இதே போன்று கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை குழந்தையின் மாமா நித்திஷ் திருப்பதி வைத்துள்ளார்.இது குறித்து திருப்பதி கூறுகையில் ‘இந்த வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. உலகில் பலரை கொன்று குவித்துள்ளது. அதே சமயத்தில் நம்மில் பலருக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளது. நம்மில் பலரை ஒன்றிணைத்துள்ளது. தீமையை எதிர்த்து போராடுவதற்கு மக்களுக்கான ஒற்றுமைக்கான அடையாளமாக இருக்க இந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்தேன்’ என்றார்.