இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்..!

நமது உடலுக்கு என்று சில அத்தியாவசியமான சத்துக்கள் அவசியமாகிறது. அதில் மிக முக்கியமான ஊட்டச்சத்து தான் இந்த இரும்புச் சத்து.இரும்புச் சத்து நமது இரத்தத்திற்கு அவசியம் தேவையானா ஒன்று. ஆனால் நவீன காலங்களில் பெரும்பாலான பெண்கள் இந்த இரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிப்படைகின்றனர்.

இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு அதிகப்படியான சோர்வு மற்றும் எரிச்சல் உண்டாகும்.இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக் …அதுமட்டுமின்றி இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்னும் நிலையை உண்டாக்கும்.இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட மருந்துகள் இருந்தாலும் சில உணவுகளும் எடுத்து கொள்வது சிறந்தது.அந்தவகையில் தற்போது இரும்புச்சத்து குறைபாடால் ஏற்படும் இரத்த சோகையை போக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

இரும்புச் சத்து குறைபாட்டினால் …சிக்கன் அல்லது மீன் உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் டூனா போன்ற மீன்களில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக இதனையும் சாப்பிட்டு வரலாம்.முட்டைகளில் அதிகளவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இயற்கையாக நிறைந்துள்ளது.சைவ உணவாளர்களுக்கு, இரும்புச்சத்தானது பருப்பு வகைகளில் அதிகம் நிரம்பியுள்ளது. அதற்கு பருப்பு வகைகளை சாலட் வடிவிலோ அல்லது தால் போன்றோ தயாரித்து உட்கொள்ளலாம்.

பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. பசலைக்கீரையைத் தவிர, இரும்புச்சத்து அதிகம் நிறைந்த மற்றொன்று என்றால் அது கேல் கீரை.

இதனை தவறாமல் சாப்பிட்டு வரலாம்.நட்ஸ் மற்றும் விதைகள் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, இவற்றில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. எண்ணெயில் போட்டு லேசாக வறுத்து, உப்பு சேர்த்து சாப்பிடலாம்.காலையில் இந்த உணவுகளை …இரும்புச்சத்து குறைபாட்டைத் தடுப்பதில் சிட்ரஸ் பழங்களும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். , சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிகிறது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், காபி, டீ போன்றவற்றை அதிகமாக குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உணவு உட்கொண்டதும் காபி, டீயைக் குடிக்கக்கூடாது. வேண்டுமானால், உணவு உண்ட 2 மணிநேரத்திற்கு பின் குடிக்கலாம்.