பிறந்த இரட்டைக்குழந்தைகளுக்கு இப்படியும் பெயர் வைத்த பெற்றோர்கள்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்க அதை தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயராக சூட்டியுள்ளனர் தம்பதினர் ஒருவர். கடந்த மூன்று மாதங்களில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அச்சமும், அதிர்ச்சியும் கொள்ளும் அளவிற்கு கொரோனா பெரும் உயிர்கொல்லி நோயாக மாறியுள்ளது. கொரோனாவால் உலக அளவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு கொரோனா என பெயரிடுவது தற்போது ட்ரெண்டாகி வருவதாக தெரிகிறது. சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா என பெயரிட்டிருப்பதாக செய்திகள் பரவின. தற்போது ராய்ப்பூரில் ப்ரீத்தி வர்மா என்ற பெண் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். அந்த குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கொரோனா என்றும், பெண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெயரிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இதுகுறித்து அந்த குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா தான் குழந்தைகளை பெற எதிர்கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு இந்த பெயரை வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.