மூடப்பட்ட அரசாங்கப் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து முக்கிய பேச்சு இன்று..!!

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகளை திறப்பது தொடர்பான பேச்சு இன்று இடம்பெறவுள்ளது.கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த தீர்க்கமான பேச்சு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இன்று இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.