இலங்கை வரும் எதிர்பார்ப்பில் வெளிநாடுகளில் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

இலங்கை வரும் எதிர்பார்ப்பில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அந்த செயற்பாட்டின் வேகம் குறைவடைய கூடும் என வெளியுறவு தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.கடந்த நாட்களாக குவைத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 466 பேரில் 70 பேருக்கு கொரோனா தொற்றியிருந்தமை உறுதியாகியுள்ளது.அதற்கமைய கட்டார் நாட்டில் இருந்து 273 பேரை இன்று காலை நாட்டிற்கு அழைத்து வரவிருந்த விமான பயணம் தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.40 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.எனினும், விண்ணப்பித்தவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வெளியுறவு தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.