நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், அனைத்து மக்களும் அலுவலகங்களிற்கு வருவது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அலுவலகங்களல் பணியாற்றுபவர்களையும், வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்களையும் நிறுவனங்களின் தலைவர்கள் முறையான விதத்தில் ஒழுங்கமைக்க முடியும் என்று கூறினார்.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், அது நாட்டை 100% இயல்பாக்குவதாக கருதக்கூடாது என்றும் தெரிவித்தார்.சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே நாட்டின் 100% இயல்பாக்கம் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.