தண்ணீர் அதிகமாக குடிப்பவரா நீங்க; அப்போ இது உங்களுக்குத்தான்

பொதுவாக உணவின்றி கூட சில நாட்கள் வாழ்ந்திடலாம். ஆனால் நீரின்றி வாழ முடியாது.

உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்காவிட்டால் உடல் உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்காது. உடலின் வெப்பநிலை முதல் செரிமானம் வரை எல்லாவற்றுக்குமே நீர் தேவைப்படுகிறது.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடித்துவிட வேண்டும். இதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீரை எடுத்து கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

தற்போது அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.

அதிக தண்ணீர் குடித்தால்

  • அதிக தண்ணீர் குடித்தால் ஒரு சிலருக்கு உடல் எடை கூடும். தசைகள் வலுவிழந்து காணப்படும்.
  •  அதிகப்படியான தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்டின் அளவு குறையத்துவங்கும். இதனால் தசை வலி ஏற்படும்.
  • நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது கிட்னியின் வேலையும் அதிகரிக்கிறது. இதனால் கிட்னி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருப்பதால் உங்கள் உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்ககூடிய ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
  • தேவைக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும்போது ரத்த நாளங்களில் அதிகளவு தண்ணீர் சேரும் அபாயம் உள்ளது.

என்ன தீர்வு ?

  •  அதிகளவு தண்ணீர் குடித்ததால் தான் இந்தப்பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்று அறிந்து கொள்ளுங்கள்.
  • அதிகளவு தண்ணீர் குடிப்பதை முதலில் நிறுத்தங்கள் டியூரிடிக்ஸ் எடுக்கலாம். இவை சிறுநீர் அளவை அதிகப்படுத்தும்.
  •  சிலருக்கு அவர்கள் எடுக்கும் மருந்துகள் கூட அதிகம் தாகம் ஏற்படுத்தும், அதனால் அவற்றை நிறுத்தலாம். சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.