உங்களுக்கு அதிக பண பிரச்சனை இருக்கா? எனி கவலை வேண்டாம் குரு பகவானை நினைச்சு 11 வியாழன் இத செய்யுங்க…

என்ன பரிகாரம்?

குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு காலையில் எழுந்து குளித்ததும், மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். பெண்கள் செய்வதாக இருந்தால், தலையில் மஞ்சள் நிற பூவை வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, குரு பகவான் இருந்தால் அவருக்கு மஞ்சள் நிற பூவை வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் செய்யலாம்.

மஞ்சள் பரிகாரம்

பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்த பின்னர், விளக்கேற்ற வேண்டும். அதன் பின் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் தூளில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பச்சை கற்பூரம் நல்ல வாசனை கொண்டது என்பதால், இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.

குரு மந்திரம்

தயாரித்து வைத்துள்ள மஞ்சள் கிண்ணத்தை இடது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, அதன் மேல் வலது உள்ளங்கையை வைத்து மூடி, பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து, ‘ஓம் ஸ்ரீகுருவே நமஹ’ என்ற குரு மந்திரத்தை 27 முறை உச்சரித்து, குரு பகவானை மனதார நினைத்து, உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனை நீங்க வேண்டும், கடன் தீர வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும்.

தினமும் நெற்றியில் மஞ்சள் இடவும்

பூஜை செய்த மஞ்சளை பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சளை தினமும் காலையில் குளித்துவிட்டு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வியாழக்கிழமை வரைக்கு வேண்டிய மஞ்சள் தூளை பூஜைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வியாழக்கிழமை அன்று புதிதாக மஞ்சளை பூஜை செய்து பயன்படுத்த வேண்டும்.

11 வியாழக்கிழமை செய்யவும்

இப்படி இந்த மஞ்சள் பூஜையை தொடர்ந்து 11 வியாழக்கிழமை செய்து, அந்த மஞ்சளை நாள்தோறும் நெற்றியில் வைத்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணக்கஷ்டம் விரைவில் நீங்கும். குருபகவானை நம்பி இந்த பரிகாரத்தை செய்து வந்தால், கூடிய சீக்கிரம் பண பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.