நாளை முதல் மரக்கறி விலைகளை நிர்ணயிக்கும் இடைத்தரகர்களுக்கு ஆப்பு.!! களத்தில் இறங்கும் பொலிஸ் படையணி.!!

நாட்டில் மரக்கறி வகைகளின் விலையை கட்டுப்படுத்த பொலிசாரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாடு முழுவதும் மரக்கறிகளின் விலைகளை கண்காணிக்க பொலிசார் புதிய பொறிமுறையை வகுத்துள்ளனர்.
மெனிங், பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் மரக்கறிகளின் விலைகளை பொலிசார் கண்காணித்து, அந்த விலைப்பட்டியலை நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு அந்தப் பட்டியலை அனுப்பி வைப்பார்கள்.இதன்படி, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சந்தைகளிலும் மரக்கறிகளின் விலைகளை பொலிசார் ஆய்வு செய்வார்கள்.இடைத்தரகர்கள் மரக்கறிகளின் விலையை அதிகரித்து கொள்ளை இலாபமீட்டுவதை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.