பல்வேறு நோய்களிட்கு தீர்வாகும் இயற்கை தாவரங்கள் !

மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை ஏராளமான வளங்களைத் தன்னிலே வைத்திருக்கிறது. ஆனால் மனிதா்கள் தான் பல நேரங்களில் இயற்கை வழங்கும் ஒப்பற்ற வளங்களைக் கண்டு கொள்வதில்லை.
மனித வாழ்க்கையில் நோய்கள் வரும் போது மருத்துவ சிகிச்சைகள் செய்து அவற்றில் இருந்து குணமடையலாம். அந்த மருந்துகள் நமது நோய்களை நீக்கி உடனடியாக நமக்கு ஆரோக்கியத்தை வழங்கலாம். ஆனால் அதே நேரத்தில் நமக்கு ஏற்படும் நோய்கள் குணமடைய இயற்கையும் ஏராளமான மருத்துவக் தன்மைகளைக் கொண்டிருக்கிறது. இயற்கை அளிக்கும் மருந்துகள் நமக்கு நீண்ட கால ஆரோக்கியத்தை வழங்குகிறது. மேலும் இயற்கை மருந்துகளின் விலை மிகவும் குறைவாக இருக்கும். அதோடு இயற்கை மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை ஆகும்.

இயற்கையில் கிடைக்கும் மருந்துகளைப் பற்றி பேசும் போது, அவற்றினுடைய நிலைத்த தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இயற்கையானது தனது தன்னலத்தை மறுத்து, நமக்காக ஏராளமான வளங்களை வழங்கும் போது, பதிலுக்கு நாமும், இயற்கையை பாழ்படுத்தாமல், அதைப் பேணிக் காக்க வேண்டியது நமது கடமையாகும்

கீழே ஒருவரது தோட்டத்தில் இருக்க வேண்டிய மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வரும் இந்த தாவரங்கள் நமக்கு நமது ஆரோக்கியத்திற்குத் தேவையான ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன.

மஞ்சள் செடி மஞ்சள் ஒரு தங்க மசாலா என்று கருதப்படுகிறது. மஞ்சளில் வீக்கத்திற்கு எதிரான தடுப்பான்கள், பாக்டீாியாக்களுக்கு எதிரானத் தடுப்பான்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன. அதனால் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளையில் ஏற்படும் நோய்கள் போன்றவை ஏற்படுவதை மஞ்சள் குறைக்கின்றது. மேலும் உடல் வலியைக் குறைத்து, நமது மன நிலையை புத்துணா்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மஞ்சளை நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம், அல்லது பாலில் மஞ்சள் பொடியைக் கலந்து பானமாக அருந்தலாம்.

துளசிச் செடி துளசிச் செடி இந்திய வீடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. இந்திய மக்களால் இந்தச் செடி புனிதமாக வணங்கப்படுகிறது. துளசியில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களும், பாக்டீாியாக்களுக்கு எதிரான தடுப்பான்களும் நிறைந்துள்ளன. அதனால் துளசிச் செடி நமது சொிமானத்தை சீா்படுத்துகிறது. நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கிறது. வளா்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நமது உணவுகளை அழகுபடுத்த துளசியைப் பயன்படுத்தலாம். மேலும் நாம் அருந்தும் பானங்களில் துளசியைக் கலந்து அருந்தலாம்.

ஸ்டீவியா (Stevia) அல்லது இனிப்புத் துளசிச் செடி இனிப்புத் துளசியின் இலை மிட்டாய் இலை என்று கருதப்படுகிறது. ஏனெனில் இனிப்புத் துளசியின் இலைகள் சா்க்கரையை விட அதிக இனிப்பாக இருக்கும். இனிப்புத் துளசியில் இனிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, சா்க்கரை நோயாளிகளுக்கு சா்க்கரை வழங்குவதற்குப் பதிலாக இனிப்புத் துளசி வழங்கப்படுகிறது. இனிப்புத் துளசியை நமது உணவிலும் மற்றும் பானங்களிலும் கலந்து சாப்பிடலாம்.

பூண்டுச் செடி நம்முடைய பல்வகையான உணவுகளில் பூண்டு சோ்க்கப்படுகிறது. பூண்டு உணவிற்கு மணத்தையும், சுவையையும் தருகிறது. அதோடு நமது சொிமானத்திற்கு உதவி செய்கிறது. இரத்த அழுத்தத்தை சீா்படுத்துகிறது. கொழுப்பின் அளவை பராமாிக்கிறது. மூளைச்சிதைவு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. பூண்டை பச்சையைாக சாப்பிடலாம் அல்லது நமது உணவுகளில் சோ்த்து சமைத்து சாப்பிடலாம்.

மிளகுக் கீரை அல்லது புதினாச் செடி மிளகுக் கீரை பொதுவாக புதினா என்று அழைக்கப்படுகிறது. பாக்டீாியாக்கள் தடுப்பு கொண்ட இந்த புதினா நமது சொிமானத்திற்கு உதவி செய்கிறது. தலைவலியில் இருந்து விடுதலை கொடுக்கிறது. அலா்ஜிகளில் இருந்து நிவாரணம் வழங்குகிறது. வாய்த் துா்நாற்றத்தைத் தடுக்கிறது. புதினா நறுமண எண்ணெயை நமது உடலில் தடவலாம் அல்லது முகா்ந்து பாா்க்கலாம். மேலும் தேநீாில் புதினா இலைகளைக் கலந்தும் அருந்தலாம்.

இறுதியாக பொதுவாக தாவரங்கள் வெளியில் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பாக நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில் நமது சுற்றுப்புறக் காற்று மாசடைந்து இருக்கிறது. ஆகவே வெளியிலிருந்து இந்த தாவரங்களைப் பறித்து பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும்.