அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றுடன் விடுமுறை !

அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன.