யாழில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்

யாழில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். வேலைக்கு செல்வோர் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாத நிலையும் காணப்படுகின்றது.

அதேவேளை இன்றும் நாளையும் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.