மதுபானங்களின் விலையை மீண்டும் அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை

மதுபானங்களின் விலையை மீண்டும் அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிய வருகின்றது.

எதனோலின் விலை 700 ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதனோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளின் விலை 200 வீதத்தினால் அதிகரித்து இருப்பதனால் எதனோலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.