சற்று முன்னர் இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று.!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று மாலை இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை  1,182 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 41 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.கொரோனா தொற்று சந்தேகத்தில் 79 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 695 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இலங்கையில் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னர் வந்த செய்தி செய்தி….

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.புதிதாக 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா காரணமாக இலங்கையின் பத்தாவது மரணம் இன்று பதிவாகியுள்ளது.குவைத்திலிருந்து நாடு திரும்பி, திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று (25) மாலை வரை நாட்டில் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் குவைத்தில் இருந்து அண்மையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்கள்.இன்று உயிரிழந்த பெண்ணும் குவைத்திலிருந்து நாடு திரும்பியவரே.குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 63 பேர் இதுவரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுவரை நாட்டில் 1164 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 459 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 695 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.