இலங்கையில் கொரோனா தொற்றினால் நிகழ்ந்த 10வது மரணம்.!! திருகோணமலையில் பதிவானது…!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்து திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 51 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.