சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அறிவித்தல்

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

எரிபொருள் தேவையான வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என தெரிவித்து பல தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி குறித்த அறிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.