வயோதிபத் தம்பதியை கத்தி முனையில் கட்டிவைத்துக் கொள்ளை..!! யாழ் கந்தரோடையில் நள்ளிரவில் பயங்கரம்..!!

யாழ்ப்பாணம் கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு ஏழரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்.கந்தரோடை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்,கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த அவர்கள், இருவரையும் மிரட்டி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.வீட்டிலிருந்து வயோதிப தம்பதியை கட்டிவைத்துவிட்டு வீட்டிலிருந்த 7 பவுண் நகை மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றனர். குறித்த சம்பவத்தின்போது ,ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பலே வயோதிப தம்பதியை அச்சுறுத்திகொள்ளையில் ஈடுபட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.