பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! ஐவர்க்கு ஏற்பட்ட நிலை

பிரித்தானியா லங்காஷையரில் – ஸ்கெல்மர்ஸ்டேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனால் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து அம்பியுலன்ஸ் சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் பல வீடுகளில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.