ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் என சந்தேககிக்கப்படும் ஒருவர் மீது இன்று இரவு வாள்வெட்டு

ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் என சந்தேககிக்கப்படும் ஒருவர் மீது இன்று இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அளவெட்டியை சேர்ந்த இவர் தேவை நிமித்தமாக சண்டிலிப்பாய் பகுதிக்கு காரில் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது, அவரை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.