நாளை (18) முதல் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு !

இரண்டு LP எரிவாயு கப்பல்களுக்காக இன்று 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2,800 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர், பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்று (17) இரவு ஆரம்பிக்கப்படும் எனவும் நாளை முதல் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.