கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.அதன்படி குறித்த தடை விதிமுறைகள் மீறப்படுவதாக தகவல் கிடைத்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.