போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதிரடியாகக் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர்..!!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.25 வயதான செஹான் மதுசங்க எனும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரே பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீரர் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா அணிக்கான பல போட்டிகளில் விளையாடியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இவர் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-ibctamil