பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

நாடடின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மே மாதம் 9ஆம் திகதி வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு, 071 859 4901, 071 859 4915, 071 859 2087, 071 859 4942, 071 232 0145, 011 242 2176