தங்கம் அணியும் பெண்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா ?

தங்கம் என்றால் பலரும் வாங்கிட விட வேண்டும் என்ற ப்ரியம் பெண்களுக்கு இருக்கும். அதிலும், தங்கம் விலை குறைவு என்றாலே முந்தியடித்துக்கொண்டு வாங்க சென்றுவிடுவார்கள்.அந்த அளவிற்கு தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு எப்பொழுதும் குறைந்ததே இல்லை. தங்கம் உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது.உடலின் எந்தப் பகுதியில் எந்த நகைகளை அணிந்தால் எந்த உடல் நலப் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

தங்கமானது செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளம் என்றாலுமே தங்கமானது. செலாவணிக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு உலோகமாகும்.மேலும், சோர்வு, பலவீனம் மற்றும் இரத்த சோகை போன்ற புகார்கள் உள்ளவர்கள் தங்க ஆபரணங்களை அணியலாம்.

மன அழுத்தம் குறையும்
காதுகளில் காதணிகளை அணிவதை பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.நகைகளை காதில் அணிவதால் காதில் தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. காதணிகள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அபாயத்தையும் குறைக்கிறது.

ஆரோக்கியமான இதயம்
தங்க நகைகளை அணிவது உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் வெப்பம் உருவாகிறது.இதன் மூலம் சளி, ஆஸ்துமா அறிகுறிகள் வாச நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறையும். இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.