இலங்கையின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல மரணம்

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல மரணமடைந்துள்ளார்.

66 வயதான அவர் உடல் நல குறைவினால் அவுஸ்திரேலியாவில் இன்று காலை மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான பேர் தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கி வந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் ஹூலுகல்ல கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.