இலங்கையில் திருமண வைபவங்களில் பங்கேற்பவர்கள் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..!!

திருமண வைபவங்களில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் புதிய நடைமுறையை சுகாதார அமைச்சுத் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்தவகையில், திருமண மண்டபத்தில் அமரக் கூடியவர்களில் 40 சதவீதத்திற்கு விஞ்சாமல் நிகழ்விற்கு அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றும் அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.எனினும், 100ற்க்கும் மேற்பட்ட விருந்தினர்களை விழா மண்டபத்தில் அனுமதிக்கக்கூடாது என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதார பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் லக்சுமன் கம்லத் தெரிவித்தார்.அத்துடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் திருமண நிகழ்வில் பங்கேற்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விருந்தினர்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும் மணமக்கள் உள்பட அனைவரும் முகமூடிகளை அணிய வேண்டும் , என்பதுடன் கட்டியணைத்தல், கைகொடுத்தல் தவிர்க்கப்படவேண்டும் தொடுகை அல்லாமல் வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும் என்பதுடன் குழுவாக ஒளிப்படம் எடுப்பது தவிர்க்கப்படவேண்டும் என்றும் அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.