அரச தலைவர் முன்னிலையில் இன்று பதவியேற்கும் நான்கு அமைச்சர்கள்

நான்கு அமைச்சர்கள் இன்று அரச தலைவர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சராகவும் , தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் , பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர்.

இந்நிலையில், தற்பொழுதும் அவர்களுக்கு அதே அம்மைச்சு பதவிகளே வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.